Skip to content
Home » புத்தாண்டில்…..பனை விதை விதைப்பு ….. திருச்சியில் தண்ணீர் அமைப்பு கொண்டாட்டம்

புத்தாண்டில்…..பனை விதை விதைப்பு ….. திருச்சியில் தண்ணீர் அமைப்பு கொண்டாட்டம்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு  திருச்சி தீரன் நகர் பகுதியில், தண்ணீர் அமைப்பு சார்பில் பனை விதைகள் விதைப்பு நடைபெற்றது.புத்தாண்டு தொடக்கமாகமாநில விதை, மாநிலம் காக்க விதை, என்ற நோக்குடன் பனை விதை விதைக்கப்பட்டது.மண் வளம், நிலத்தடி நீர் வளம், காத்திடும் பனை வேர் முதல் உச்சி வரை மண்ணுக்கும் உயிர்களுக்கும் பயன்தரக் கூடிய மாநில மரமாகும்.

பனையோலை, நுங்கு, பதனீர், பனங்கிழங்கு, என நீள்கிறது இதன் பயன்பாடு, பெரும் புயல், பேரிடர் காலங்களில் புயலின் வேகத்தைக் குறைத்து நிலங்களை காத்திடும் மரம். எனவே இதன் சிறப்பை அனைவருக்கும் உணர்த்தும் விதமாகவும் அடுத்துவரும்  தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் பனை விதைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் கே.சி.நீலமேகம் தலைமை வகித்தார், கலைக் காவிரி கல்லூரியின் உதவிப் பேராசிரியர் செயலாளர் கி.சதீஷ் குமார் முன்னிலை வகித்து ஒருங்கிணைத்தார்.

அந்தநல்லூர் வட்டாரக் கல்வி அலுவலர் மருதநாயகம்   பனை விதைகள் விதைத்து  நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மேலும் ஆயிரம் பனை விதைகளை மாணவர்களை வைத்து விதைத்திட வழங்கப்பட்டது.
ஷபி அகமது, கிருஷ்ண குமார்மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!