மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா அன்னவாசல் ஊராட்சி கழனிவாசல் கிராமத்தில் சுதாகர் சரவணன் ஆகியோரின் இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தில் சம்பா சாகுபடி பயிரிடப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவ மழையால் வயலில் ஒரு அடியில் வேர் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் தண்ணீரில் நீர்க்குமிழி ஏற்படுவது போல் இன்று காலை முதல் தண்ணீர் கொப்பளித்து வருகிறது. நூற்றுக்கணக்கான இடங்களில் வயல் முழுவதும் கொப்பளித்து வருகிறது. சிறு துவாரம் ஏற்பட்டு கொப்பளித்து வருவதை சேற்றைக் கொண்டு அடைத்தாலும் கொப்பளித்து வருவதை நிறுத்த முடியவில்லை. தங்கள் பகுதி விவசாய நிலத்தில் ஓஎன்ஜிசி எரிவாயு கொண்டு செல்லும் கெயில் குழாய் புதைக்கப்பட்டுள்ளதால் எரிவாயு கசிவு அல்லது ஜெயில் குழாயின்
தாக்கத்தால் விவசாய நிலத்தில் உள்ள தண்ணீரில் கொந்தளிப்பு போன்று கொப்பளிப்புகள் ஏற்பட்டு வருகிறதோ என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து வேளாண்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் ஆய்வு செய்து எதனால் நிலத்தில் உள்ள தண்ணீர் கொப்பளிக்கிறது என்று ஆய்வு செய்து அச்சத்தை போக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது விவசாயிகள் தகவல் அளித்துள்ளதாகவும் நேரடியாக சென்று ஆய்வு செய்தால் தான் தெரியும் என்று தெரிவித்துள்ளனர்.