தீபாவளியையொட்டி திருச்சி மாநகரின் முக்கியமான வியாபார தளங்களான என்எஸ்பி ரோடு, பெரிய கடை வீதி, சின்ன கடை வீதி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க மாநகர போலீசார் சார்பில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் மலைக்கோட்டை. பூம்புகார், தெப்பக்குளம் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கபட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை இந்த கண்காணிப்பு கோபுரங்களில் ஷிப்ட் முறைப்படி ஒரு போலீஸ்காரர் வாக்கி டாக்கி மற்றும் பைனாகுலர் வைத்துக்கொண்டு கண்காணிப்பது வழக்கமாக இருந்தது.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக கண்காணிப்பு கோபுரங்கள் 3 இடங்களில் அமைக்கப்பட்டதே தவிர அதன் மேல ஏற எந்த வசதியும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் புலம்புகின்றனர். பெயருக்கு கண்காணிப்பு கோபுரங்கள் என அதிகாரிகள் அதன் மேல ஏறி எந்த வசதியும் இல்லை என்பதை கவனிக்க வில்லையா? அல்லது வேண்டுமென்றே விட்டு விட்டார்களா? என கிண்டல் செய்கின்றனர் வியாபாரிகளும் பொதுமக்களும்…