கலெக்டர்கள், எஸ்.பிக்கள், ஐஎப்எஸ் அதிகாரிகள் 2 நாள் மாநாடு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது:
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் சமரசம் இருக்கக் கூடாது.அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முனைவோருக்கு இடம் அளிக்கக் கூடாது.நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் உள்நோக்கத்தோடு சிலர் அமைதியை கெடுக்க செயல்படுவர்.பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்துவது முதல் இலக்காக இருக்க வேண்டும்.
சாலை விபத்துகளால் அதிக மரணம் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பது வேதனை அளிக்கிறது.தமிழகத்தில் கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனையை அறவே தடுத்து நிறுத்த வேண்டும். போதைப்பொருள் கடத்துபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.சென்னை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிறப்பு திட்டம் ஏற்படுத்த வேண்டும்.பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் சமரசம் இருக்கக் கூடாது.சமூக ஊடகங்களை ஆட்சியர்கள், எஸ்பிக்கள் தொடர்ந்து கண்காணித்து பொய் செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என்றார்.