Skip to content
Home » மும்பை வீதியில் கிரிக்கெட் ஆடிய வார்னர்

மும்பை வீதியில் கிரிக்கெட் ஆடிய வார்னர்

  • by Authour

ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. முதல் டெஸ்ட் மற்றும் 2-வது டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் மட்டும் விளையாடிய வார்னர் காயம் காரணமாக விலகி உள்ளார். அடுத்ததாக ஒருநாள் தொடர் மார்ச் 17-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. இதில் காயம் காரணமாக விலகி இருந்த டேவிட் வார்னர் இடம் பெற்றுள்ளார். இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் டேவிட் வார்னர் மும்பையில் உள்ள ஒரு தெருவில் , கிரிக்கெட் விளையாடியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *