Skip to content

மொரிஷியஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் விடுத்த அழைப்பின்பேரில் அந்நாட்டின் 57-வது தேசிய தின கொண்டாட்டதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ,இந்தி பிரதமர் நரேந்திரமோடி  2 நாட்கள் அரசுமுறை பயணமாக இன்று காலை மொரீஷியஸ் சென்றடைந்தார். அங்கு அவரை பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் மாலை அணிவித்து வரவேற்றார். இந்திய வம்சாவழியினரும் திரளாக பங்கேற்று மோடியை வரவேற்றனர்.

அங்கு, இந்தியாவின் மானிய உதவியுடன் கட்டப்பட்ட சிவில் சர்வீஸ் கல்லூரி மற்றும் சமூக சுகாதார மையங்கள் ஆகியவற்றைத் திறந்து வைக்கிறார். மேலும் 20 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்தப் பயணத்தின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இருநாடுகளிடையே பரிமாறிக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

error: Content is protected !!