திருச்சி என்ஐடி கல்லூரியில் நேற்று மாணவ, மாணவிகள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். 3 பெண் வார்டன்கள் மீது புகார் கூறி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டர் பிரதீப் குமார், எஸ்.பி. வருண்குமார் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து 3 வார்டன்களும் இப்போது மாற்றப்பட்டு உள்ளனர். இந்த தகவலை திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்தார்.