Skip to content

வக்பு சட்டத்துக்கு எதிரான மனுக்கள்- உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

மக்களவையில் கடந்த 2-ம் தேதிவக்பு திருத்த மசோதா (ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு) நிறைவேற்றப்பட்டது. அடுத்த நாளில் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார். கடந்த 8-ம் தேதி வக்பு திருத்த சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.

மத்திய அரசு சார்பில் கடந்த 8-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கில் தங்களை கலந்தாலோசிக்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று மத்திய அரசு கோரியுள்ளது.

இதனிடையே வக்பு திருத்த சட்டத்தை ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக அகில பாரத இந்து மகா சபா, இந்து சேனா உள்ளிட்ட அமைப்புகள் சட்டத்துக்கு ஆதரவாக மனுக்களை தாக்கல் செய்திருக்கின்றன.

இந்த சூழலில் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள், தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முன்பு இன்று  13வது வழக்காக விசாரணைக்கு வருகிறது.

 

error: Content is protected !!