புதுக்கோட்டை மாநகராட்சி வார்டு 16க்கு உட்பட்ட பகுதிகளில் “வாக்கிங்_வித்_எம்.எல்.ஏ” என்ற நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜாவீடு வீடாக சென்று மக்களை சந்தித்து மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்வின் போது பொதுமக்கள் குடிநீர் குழாய், தெருவிளக்கு, பழுதான மின் கம்பங்களை சீரமைத்தல், மாநகராட்சிக்கு சொந்தமான தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மீண்டும். அவற்றை மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர், மக்கள் தெரிவித்த புகார்களை அரசு அதிகாரிகளுக்கு எடுத்துரைத்து அவற்றை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எம்.எல்.ஏ கூறினார். உடன் வந்த அதிகாரிகளிடமும் அந்த கோரிக்கைகளை உடனுக்குள் கொடுத்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.
எம்.எல்.ஏவுடன் முன்னாள் நகராட்சி துணைத்தலைவர்க.நைனா முகமது, திமுக வட்ட செயலாளர் ஆசிஃப், , வரிசை முகமது , பாபு மற்றும் திமுக நிர்வாகிகளும், நகராட்சி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.