தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த மர்ம நபர் 7 பவுன் செயினை பதித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி சோழன் நகரை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி நீலாவதி (55). இவர் தனது பேத்தியை அருகே உள்ள பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு தனியாக வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே பைக்கில் வந்த மர்ம நபர் திடீரென நீலாவதியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்..
இதுகுறித்து நீலாவதி தமிழ்ப பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.