சமூகநீதிக்காக வி.பி. சிங் செய்த பணிகளைப் போற்றும் வகையில், சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ. 52 லட்சத்தில் வி.பி.சிங் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். விழாவில், உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் மனைவி சீத்தாகுமாரி, மகன்கள் அஜய்சிங், அபய்சிங் மற்றும் தமிழக அமைச்சா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்றனர். சிலையை திறந்து வைத்த பிறகு, அமைச்சர் உள்ளிட்ட
அனைவருடனும் வி.பி. சிங் குடும்பத்தினர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். வி.பி. சிங் குடும்பத்தினருடன் மு.க. ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் அதனைத் தொடர்ந்து வி.பி. சிங் குடும்பத்தினர் சார்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்றும் அகிலேஷ் யாதவ், வி.பி. சிங் மகன் அபய்சிங் மற்றும் பலர் உரையாற்றினர்.