தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தஞ்சாவூர் ,மாவட்டம் 175 ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி பாகம் எண் 99 -ல் தெற்கு நத்தம் கிராமத்தில் 25.1.2025 , அன்று15 வது வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஜூனியர் ரெட் கிராஸ் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஆகியோர் இணைந்து 15 வது தேசிய வாக்காளர் தினத்தை கொண்டாடினர். விழாவில் மாணவர்களுக்கு தேசிய வாக்காளர் தின பாடல் ஒளிபரப்பப்பட்டது மேலும் விழாவில் கலந்து மாணவர்களுக்கு தொன்மை மன்ற பொறுப்பாசிரியர் திரு. ராஜராஜ சோழன் அவர்கள் வாக்காளர் தினத்தின் அவசியம் பற்றியும் வாக்களிக்க வேண்டியதன் கடமை பற்றியும் எதிர்கால வாக்காளர்கள் எப்படி பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மாணவர்களுக்கு வலியுறுத்தி கூறினார். ஜே ஆர் சி ஒரத்தநாடு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் தமிழ்வாணன் தேசிய வாக்காளர் தின உறுதி மொழியை வாசிக்க விழாவில் பங்கு பெற்ற அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். “I am a future voter” என்ற வாசகத்தை பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் கோ. திருமுருகன் அவர்கள் கூற மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முழங்கினர். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தமிழ் முக்கூடல் மன்ற பொறுப்பாளர் வி. அண்ணாதுரை அவர்கள் வரவேற்று பேசினார், விழா ஏற்பாடுகளை ஜூனியர் ரெட் கிராஸ் ஒரத்தநாடு ஒன்றிய அமைப்பாளர் திரு தமிழ்வாணன் அவர்கள் செய்திருந்தார் வாக்குச்சாவடி நிலை அலுவலர் திரு அன்பழகன் அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது. மேலும் விழாவில் ஆசிரியர்கள் ,வாக்காளர்கள், எதிர்கால வாக்காளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஆகியோர் பங்கு பெற்றனர்.
தஞ்சை அருகே அரசு பள்ளியில் வாக்காளர் தின கொண்டாட்டம்….
- by Authour
Tags:அரசு பள்ளிஉறுதிமொழிஒரத்தநாடுதஞ்சைதேசிய வாக்காளர் தினம்தொகுதிவழிகாட்டுதல்வாக்காளர் தின கொண்டாட்டம்விழா