Skip to content

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக மயிலாடுதுறையில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்..

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக மயிலாடுதுறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டனம் தெரிவித்தனர். வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வக்பு திருத்த சட்டத்தினை உடனே திரும்ப பெற வேண்டும். வக்பு திருத்த சட்டத்தின் பெயரால் இஸ்லாமியர்களின் சொத்துகளை கைப்பற்ற முயற்சிப்பதை பாஜக அரசு கைவிட வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக பாராளுமன்றத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக எந்த சட்டத்தையும் நிறைவேற்றக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட ஒருமித்த கருத்துடைய கட்சி மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்று பேசி, கோரிக்கையை வலியுறுத்தி கண்டன
ஆர்ப்பாட்டம்.

error: Content is protected !!