சென்னையில் இன்று சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது… ஜெயலலிதா ஆட்சியின் போது, ஒரு பெண் முதல்வர் என்பதால் அரசியல் கட்சியினர் பலரும் விமர்சனம் செய்தனர். தற்போது ஜெயலலிதா படம் பலருக்கும் தேவைப்படுகிறது. அதற்கு அவர் ஆற்றிய பணிகளே காரணம். அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்கும் பணி 90% நிறைவு பெற்றது. இன்னும் 10 நாட்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். சுற்றுப்பயணம் எல்லாருக்கும் தெரிகிற மாதிரி தான் போக போறேன். அப்பொழுது நீங்கள் பார்த்து தெரிந்துகொள்ளலாம். தமிழக போலீசார் சரியாக செயல்படுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக ஒருங்கிணைப்பு 90 சதவீதம் முடிந்து விட்டது… சசிகலா தகவல்..
- by Authour
