தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் செயற் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். செயலர் கண்ணதாசன், பொருளாளர் உஷாராணி, துணைத் தலைவர் புவனேஸ்வரி, வக்கீல் கண்ணன், சிவா உட்பட பங்கேற்றனர். இதில் 100 பேருக்கு இலவச தொழிற் பயிற்சி வழங்குவது, போட்டி தேர்வுக்கான பயிற்சியை விரிவுப் படுத்துவது, பாபநாசத்தில் அரசுப் பள்ளிகளில் முதல், இரண்டாம் இடம் பெறும் மாணவர்களுக்கு பணப் பரிசு வழங்குவது, யோகா பயிற்சி வழங்குவது உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேறின.
விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம்….
- by Authour
