Skip to content
Home » மாநில விதை பண்ணை வளாகத்தில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும்… விவசாயிகள் கோரிக்கை…

மாநில விதை பண்ணை வளாகத்தில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும்… விவசாயிகள் கோரிக்கை…

  • by Senthil

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.

இதில் கரும்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் இனுங்கூரில் செயல்பட்டு வரும் மாநில விதை பண்ணை வளாகத்தில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இடம் கோரிக்கை மனு வழங்கினர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் வேளாண்மை கல்லூரிக்கு, மாநில அரசு 10 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட வேளாண்மை கல்லூரி அமைவதற்கு இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் வழிகாட்டுதலின்படி குறைந்தபட்சம் 45 ஏக்கர் நிலம் தேவை.

இந்த நிலையில் கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் 205.44 ஏக்கர் நிலத்தில் செயல்பட்டு வரும் மாநில விதைப்பண்ணையில் தற்போது சுமார் 60 ஏக்கர் நிலம் மட்டுமே நெல் விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

மீதமுள்ள 145 ஏக்கர் நிலம் பயன்படுத்தாமல் உள்ளது. இந்த 145 ஏக்கர் நிலத்தில் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், இனுங்கூர் விதை பண்ணை கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. அப்பகுதிக்கு கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வளையப்பட்டி கரும்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் கருணாகரன் என்பவர் தலைமையில் விவசாயிகள் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!