விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ்காரராக இருப்பவர் தனுஷ்கோடி, இவரிடம் லைசென்ஸ் இல்லாத திருட்டு துப்பாக்கி இருப்பதாக மாவட்ட எஸ்.பி. கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவரிடம் விசாரணை நடத்தி திருட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அத்துடன் தனுஷ்கோடியை சஸ்பெண்ட் செய்தும் எஸ்.பி. உத்தரவிட்டார்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் தனுஷ்கோடியின் நண்பர் சுரேசை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 40 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து சுரேசை கைது செய்தனர்.