புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா ராஜாளிப்பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி (80). இவருக்கு வேலு(56), சாமிக்கண்ணு (52) என 2 மகன்கள் உள்ளனர். இதில் சாமிக்கண்ணு விராலிமலை அருகே உள்ள விருதாப்பட்டி கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அண்ணன், தம்பி இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு சாமிக்கண்ணுவின் மகன் சதீஷ்குமார் (25), ராஜாளிப்பட்டியில் உள்ள வேலுவின் வீட்டிற்கு சென்று சொத்து குறித்து மீண்டும் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வேலுவை குத்தியுள்ளார். அதை தடுக்க வந்த ரங்கசாமிக்கும் கத்தி குத்துவிழுந்தது. இந்த சம்பவத்தில் காயமடைந்த ரங்கசாமி மற்றும் வேலு இருவரையும் அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக விராலிமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் சிகிச்சை பலனின்றி வேலு பரிதாபமாக இறந்தார். ரங்கசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொலை செய்யப்பட்ட கொலையான வேலு, அரசு பஸ் கண்டக்டராக உள்ளார். இவரது மனைவி திருப்பதி. புதுக்கோட்டை மாவட்ட பாஜவில் மகளிரணி தலைவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக விராலிமலை போலீசார் வழக்குபதிவு செய்து சதீஷ்குமாரை தேடி வருகின்றனர்..
சொத்து தகராறில் பாஜ மகளிர் அணி நிர்வாகி கணவர் கொலை.. புதுக்கோட்டை அருகே பயங்கரம்..
- by Authour