கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் விதிமுறையை மீறி வெடி வெடித்ததாக கேகே நகர் போலீசார் தற்பொழுது திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக கருமண்டபம் பகுதி செயலா ளர் கலைவாணன் மற்றும் 42 வார்டு அதிமுக துணை செயலாளர் அப்துல் அஜீஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு திருச்சி 2வது நீதித் துறை நடுவர் மன்றத்தில் விசாரணை நடை பெற்று வருகிறது. இந்நிலையில் இருவருக்கும் குற் றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது .வழக்கை விசாரித்த நீதிபதி வருகின்ற 19ந்தேதி வழக்கை தள்ளி வைத்து உத்தரவிட்டார். அப்பொழுது நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே
அதிமுக நிர்வாகிகள், வக்கீல்கள் வரகனேரி சசிகு மார், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், கெளசல்யா, உறையூர் சந்திரமோகன், விக்னேஷ்வரன், எபினேசர், மற்றும் வக்கீல்கள் உடன் இருந்தனர்.