இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அவர் அரைஇறுதி போட்டியில் அபாராக வென்றார். இறுதிப்போட்டியில் போகத், அமெரிக்க வீராங்கனையுடன் மோத இருந்த நிலையில் போகத் எடை 100 கிராம் அதிகமாக இருந்ததாக கூறி அவர் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ஒலிம்பிக் கமிட்டியின் இந்த முடிவை எதிர்த்து போகத் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்படுகிறது. வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்ற வினேஷின் கோரிக்கை மீது இன்று சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்குகிறது. வினேஷ் போகத் விவகாரத்தை விசாரித்த நீதிபதி அனபெல் பெனட் இன்று மாலை தீர்ப்பு வழங்க உள்ளார்.