விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.
விநாயகர் சதுரத்தி விழா நடைபெறுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கலந்தாலோசனைக் கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில். மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பொது மக்கள் தமிழ்நாடு அரசு மற்றும் உயர்நீதி மன்றத்தின் பின்வரும் வழிகாட்டுதல்களை வழுவாது பின்பற்றிட கலெக்டர் கேட்டு கொண்டார்.
விநாயகர் சிலை அமைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தொடர்புடைய வருவாய் கோட்ட அலுவலரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னர் சிலை அமைத்திட அனுமதிக்கப்படும். களி மண் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே அமைத்திட வேண்டும்.
அமைக்கப்பட உள்ள சிலைகளின் 10 அடிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். உயரமானது பீடத்துடன் சேர்த்து. ஊர்வலத்தின் போது நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். மூன்று சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை. சிலை அமைவிடம், ஊர்வலம் மற்றும் கரைக்கக்கூடிய இடங்களில் பட்டாசுகள் மற்றும் வாண வேடிக்கைகள் வெடிப்பதற்கு அனுமதியில்லை. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.
விநாயகர் சதுர்த்தி விழாவினை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரின் வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றி சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு பாதிப்பில்லாவண்ணம் கொண்டாடும்படி பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் சார்பாக கலெக்டர் தீபக் ஜேக்கப் கேட்டுக்கொண்டார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாநகராட்சி ஆணையர்கள் சரவணகுமார் (தஞ்சாவூர்), லட்சுமணன் (கும்பகோணம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனவளவன் (பொ) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.