Skip to content
Home » காவல்துறை அனுமதிக்கும் வழியில் விநாயகர் சிலை ஊர்வலம்….புதுகை கலெக்டர் பேட்டி

காவல்துறை அனுமதிக்கும் வழியில் விநாயகர் சிலை ஊர்வலம்….புதுகை கலெக்டர் பேட்டி

  • by Senthil

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளிலும்,  முக்கிய இடங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். 3வது நாள் அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று காவிரியிலும், அருகில் உள்ள நீர்நிலைகளிலும் கரைப்பது  வழக்கம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு சட்டம்,ஒழுங்கு தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட கலெக்டர் மு. அருணா தலைமையில் நடந்தது. எஸ்.பி. வந்திதா பாண்டே முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில்  கலெக்டர் அருணா கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்விழாவிற்காக விழா ஒருங்கிணைப்பாளர்கள் விநாயகர் சிலை அமைப்பதற்கு நில உரிமையாளர்கள், காவல்துறை, தீயணைப்புத்துறை, மின்சாரதுறையிடம் தடையின்மை சான்றுகளை பெற்று உரிய அனுமதியினை வருவாய்த்துறையிடம் பெற வேண்டும்.

தமிழ்நாடு  மாசு கட்டுபாட்டு வாரியம் நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளின்படி, நீரில் கரையக்கூடிய, நச்சு இல்லாத இயற்கை சாயங்கள் பூசப்பட்ட சிலைகளை தூய களிமண்ணால் தயாரிக்க வேண்டும். சிலை அமைத்து வழிபாடு செய்யும் இடம் மற்றும் அதனை சுற்றி தேவையான முதலுதவிப்  சாதனங்கள், மருத்துவப்  உபகரணங்கள், மருந்துகள் மற்றும் எளிதில் தீப்பிடிக்காத பொருட்கள் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கூம்பு வடிவிலான ஒலி பெருக்கியை பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்கு மாற்றாக பெட்டி வடிவிலான ஒலி பெருக்கியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விழா ஒருங்கிணைப்பாளர்கள் 2 தன்னார்வலர்களை நியமித்து சிலையை பாதுகாக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மற்ற மதத்தினரை பாதிக்கும்/துன்புறுத்தும் வகையில் சத்தமாக கோஷங்களை எழுப்ப அனுமதிக்கக் கூடாது.

மேலும் காவல்துறையால் பரிந்துரைக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சிலையை வாகனங்களில் கொண்டு சென்று, மாவட்ட நிர்வாகத்தால் சிலைகளை கரைக்கஅனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். அவ்வாறு செல்லும்போது பட்டாசு வெடிபொருட்களை வெடிக்க அனுமதி கிடையாது. எனவே விழாக் குழுவினர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு  கலெக்டர் அருணா கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) .ஆர்.ரம்யாதேவி , மாவட்டஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், வருவாய் கோட்டாட்சியர்கள்பா.ஐஸ்வர்யா (புதுக்கோட்டை), தெய்வநாயகி (இலுப்பூர்),ச.சிவக்குமார் (அறந்தாங்கி) மற்றும்  காவல்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!