மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் வழிகாட்டுதலில் புதுக்கோட்டை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான வினாடி, வினாப்போட்டி முதன்மைக்கல்வி அலுவலர் மா.மஞ்சுளா வழிகாட்டுதலில் புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலகத் தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவின் மாவட்ட மேற்பார்வையாளர் ஜே.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலர் எம்.முத்துவீரன், நிர்வாக அலுவலர் கே.கோபால்ராமன், புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி ஏ.ஆர்.டி மையத்தின் ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போட்டியில் சுப்பிரமணியபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஏ.பிரியதர்ஷினி, சி.ஸ்ரீநிஷா ஆகியோரைக்கொண்ட குழுவுக்கு முதல் பரிசான ரூ 5000 ம், புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் ஆ.மிதுனா, செ.விசாலாட்சி ஆகியோரைக் கொண்ட குழுவுக்கு இரண்டாம் பரிசான ரூ 4000 ம், மணமேல்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மு.அஃப்ரின், ச.வர்ஷினி ஆகியோரைக் கொண்ட குழுவுக்கு மூன்றாம் பரிசான ரூ.3000ம், கறம்பக்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மு.சுகுணா, ஜே.சிப்ரின்ரோபினா, ஆகியோரைக் கொண்ட குழுவுக்கும், கீரனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சி.பிரியா, ஏ.விஜிலியா ஆகியோரைக் கொண்ட குழுவுக்கும் ஆறுதல் பரிசாக ரூ 1000 ம் ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டது. போட்டியினை மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மெ.சி.சாலை செந்தில், பள்ளித்துணைஆய்வாளர் கி.வேலுச்சாமி ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர்.