Skip to content

விழுப்புரம் -தாம்பரம் விரைவு பேசஞ்சர் ரயிலை அரியலூர் வரை நீட்டிக்கக் கோரிக்கை…

  • by Authour

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் மு. ஞானமூர்த்தி, தென்னக ரயில்வே மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்,

அண்மையில் தென்னக ரயில்வேத்துறை கீழ்க்கண்ட வழித்தடத்தில் மே மாதம் 2 ம் தேதிமுதல் பேசஞ்சர் ரயில்களை நீடித்து உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறேன்.

விழுப்புரம்-மயிலாடுதுறை ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு.

சென்னை கடற்கரை -வேலூர் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு.

திருச்சி-விருத்தாசலம் ரயில் விழுப்புரம் வரை நீட்டிப்பு

சேலம்-விருத்தாசலம் ரயில் கடலூர் துறைமுகம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதுபோல் விரைவு பேசஞ்சர் ரயில் காலை 5.20 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு காலை 8.15 தாம்பரம்

சென்றடையும், தாம்பரத்திலிருந்து மாலை 6 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். இந்த விரைவு பேசஞ்சர் இரயிலை அரியலூரிலிருந்து புறப்படுவதற்கு நீடித்துதர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் பயனடைவார்கள் என்று உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தலைவர்
மு. ஞானமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!