விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருப்பவர் கலிவரதன். இவர் கட்சி சார்பில் விக்கிரவாண்டியில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் பேசும்போது, முன்னாள் முதல்-மந்திரி கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி மிக மோசமான வாா்த்தைகளால் அவதூறாக பேசினார் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து, திருக்கோவிலூர் அருகே மனப்பூண்டி பகுதியில் இருந்த அவரை போலீசார் இன்று அதிகாலையில் கைது செய்து விக்கிரவாண்டிக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
