விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே புதுச்சேரியை சேர்ந்த ரவுடிகள் அருண், அன்பரசன் ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். ரவுடிகள், அருண், அன்பரசனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்தபோலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதெனும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.