பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட தொடர் மழையால் விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. சில இடங்களில் மரங்கள் விழுந்தும் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின் பாதிப்பு மற்றும் நிவாரணப்பகுதிகளை கவனிக்க கடந்த 3 நாட்களாக தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விழுப்புரத்தில் முகாமிட்டுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளையும் அவர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தினமும் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் மின் வினியோகம் மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி மேற்கொண்டு வருகிறார். அந்த கூட்டத்தில் மின் வினியோகம் தொடர்பான ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது..இந்தநிலையில் தும்பூரில், மின்பாதிப்புபகுதிகளைபார்வையிட்ட புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக மின்துறை மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார். அப்போது மின் விநியோகத்தை சீரமைக்கும்
பணியில், ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம் நலம் விசாரித்தார். அப்போது மின் ஊழியர் ஒருவரை அருகில் அழைத்து அவரதுதோளில் கையை வைத்து சாப்டீங்களா? என நலம் விசாரித்தார்.