ஆந்திராவில் மாந்திரீக பூஜை செய்த முதியவரை கிராம மக்கள் எரித்துக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் அரக்கு மலை கிராமத்தில் அடாரி தொம்புரு (60) என்பவர் எரித்துக் கொலை செய்யப்பட்டார். தொம்புரிகுடா கிராமத்தில் 15 வீடுகள் உள்ள நிலையில், அவற்றில் மலைவாழ் சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். தங்களது குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்க அடாரி தொம்புரு குடும்பமே காரணம் என நினைத்து ஆவேசம் அடைந்தனர்.
அடாரி தொம்புரு செய்யும் மாந்திரீகமே தங்களது குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்க காரணம் என கிராம மக்கள் சந்தேகம் அடைந்தனர். அடாரி தொம்புருவை கிராம மக்கள் வீட்டுக்கு வெளியே இழுத்துச் சென்று கற்கள், கட்டைகளால் தாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.