தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அடுத்த உள்ளிக் கடையில் கிராம சபா கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். இதில் அய்யம் பேட்டை மா காளிபுரத்திலிருந்து- உள்ளிக்கடை, இளங்கார்குடி வரையிலான நெடுஞ்சாலையை, நெடுஞ்சாலைத் துறை அகலப் படுத்த வேண்டும் உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேறின. இதில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயக் குமார் உட்பட பங்கேற்றனர். இதேப் போன்று கொத்தங் குடியில் நடந்த கிராம சபா கூட்டத்திற்கு தலைவர் பழனி தலைமை வகித்தார். இதில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். கொத்தங்குடி ஊராட்சியை தஞ்சாவூர் தாலுக்காவோடு இணைக்க வேண்டும். குண்டூர், உதாரமங்களத்தில் உள்ள வடிகால், பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேறின.
இதேப் போன்று ரெகுநாதபுரத்தில் நடந்த கிராம சபா கூட்டத்திற்கு தலைவர் ஜெய் சங்கர் தலைமை வகித்தார். இதில் அரசு பாலிடெக்னிக் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள வடிகால் வாய்க்கால்களைத் தூர் வார வேண்டும் உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேறின. இதேப் போன்று ராஜகிரியில் நடந்த கிராம சபா கூட்டத்திற்கு தலைவர் சமீமா பர்வீன் தலைமை வகித்தார். இதில் உறுப்பினர்கள் சிக்கந்தர், முபாரக் உட்பட பங்கேற்றனர்.