முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் 110ம் விதியின் கீழ் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:
13.1.23ல் முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் என்னால் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள ஊராட்சி ஒன்றிய சாலைகள் மற்றும் கிராம ஊராட்சி சாலைகள் மேம்படுத்த ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி தற்போது வரை 8,120 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊராக சாலைப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் சாலைகள் மேம்பாட்டுடீத்தி்ட்டம் ஆகியவற்றின் கீழும், கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 16 ஆயிரத்து 596 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மற்றும் 425 உயர்மட்ட பாலங்கள் அமைக்கத் திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.9 ஆயிரத்து 324 கோடியே49 லட்சம் ரூபாய். இதனை தொடர்ந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
வரும் இரண்டு ஆண்டுகளில் முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் கூடுதலாக மேலும் 10ஆயிரம் கி.மீ. நீளமுள்ள ஊரகச் சாலைகள் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கி்றேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.