காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி பாஜகவில் சேர்ந்ததால் ராஜினாமா செய்த விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் முன்னணியில் உள்ளார். 4 சுற்றுகள் எண்ணப்பட்டதில் அவர் 18,898 வாக்குகள் பெற்றார். பாஜக 6693 வாக்குகளும், நாம் தமிழர் 1260 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 1188 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் விளவங்கோட்டில் அதிமுக நாம் தமிழர் கட்சிக்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது.