விக்கிரவாண்டி தேர்தல் முடிவு குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
இடைத்தேர்தல் ஒரு குறியீடு இல்லை. இது தமிழக மக்களின் மனநிலை அல்ல.ஓட்டு அளித்த மக்களுக்கு நன்றி, இதை 2026க்கு முன்னோட்டம் என அமைச்சர்கள் எடுத்துக்கொண்டால் அது நிலைமை மாறும், ஆனாலும் தேர்தல் முடிவுகளை தலைவணங்கி ஏற்க வேண்டும். இது தான் 2026ல் தமிழகத்தின் முடிவு என்பது அல்ல. இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய்வோம். .
காவிரி தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகம் குறித்து கேட்டபோது, காங்கிரஸ் காரர்களுக்கு அண்ணாமலை உருவபொம்மை எரிக்க நேரம் இருக்கிறது. செல்வப்பெருந்தகை தலைமையில் ஒரு குழு கர்நாடகம் சென்று காவிரி தண்ணீர் கேட்க நேரம் இல்லையா, காங்கிரஸ் ஆட்சிதானே அங்கு நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.