விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவாக இருந்த புகழேந்தி மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து அங்கு வரும் ஜூலை மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 14ம் தேதி தொடங்கி 21 ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளராக புகழேந்தி குடும்பத்தில் ஒருவர் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அன்னியூர் சிவா வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டார். முதல்வா் ஸ்டாலின் இதனை அறிவித்தார். முன்னதாக அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் தேர்வு குறித்து முதல்வர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அன்னியூர் சிவா திமுக விவசாய தொழிலாளர் அணி மாவட்ட செயலாளராக உள்ளார்.