விக்கி்ரவாண்டி தொகுதியில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. அந்த தொகுதிக்கு உட்பட்ட கொசப்பாளையம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஏராளமானோர் வரிசையில் நின்று வாக்களித்தனர். அப்போது ஏழுமலை என்பவர் அங்கு வந்து ஒரு பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்தினார்.
அக்கம் பக்கம் நின்றிருந்தவர்கள் ஏழுமலையை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் ஏழுமலை அந்த பெண்ணின் மாஜி கணவர் என்பது தெரியவ்நதது. உடனடியாக அந்த பெண்ணை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.