விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. ஆரம்பம் முதல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் இருக்கிறார். 6வது சுற்று முடிவில் திமுக 38,570, பாமக 13,660, நாதக 2,275 வாக்குகள் பெற்றிருந்தனர்.
ஒவ்வொரு சுற்றிலும் திமுகவுக்கு பாமகவை விட 2 மடங்கு ஓட்டுகள் கூடுதலாக கிடைத்து வருகிறது. எனவே அவரது வெற்றி உறுதியாகி விட்டது. அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சிக்கு இந்த தேர்தலில் டெபாசிட் காலியாகும் நிலை தான் தெரிகிறது. இந்த தொகுதியில் டெபாசிட் பெற வேண்டுமானால் 32,582 வாக்குகள் பெற வேண்டும். நாதகவுக்கு அந்த அளவுக்கு வாக்குகள் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. எனவே திமுகவை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களில் பாமக தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழக்கும் நிலை காணப்படுகிறது.