விக்கிரவாண்டித் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ம் தேதி தொடங்கியது. 21ம் தேதி மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் அன்புமணி, நாதக வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட மொத்தம் 64 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இன்று காலை 11 மணிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி சந்திரசேகர் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையை தொடங்கினார். இதில் கனியாமூர் பள்ளியில் மரணமடைந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி வேட்புமனு உள்ளட மொத்தம் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. திமுக, பாமக, நாதக உள்பட 29 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 26ம் தேதி மாலை வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசிநாள். ஜூலை 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.