விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10 ம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க., போட்டியிடும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று வேட்பாளரை பா.ம.க., அறிவித்துள்ளது. இதன்படி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாநில துணைத் தலைவராக இருக்கும் சி.அன்புமணி என்பவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.