விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ.,வும், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான புகழேந்தி, உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி காலமானார். எம்எல்ஏ புகழேந்தி மரணம் குறித்து சட்டசபை செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலி என தேர்தல் ஆணையம் உடனடியாக அறிவித்தது. இந்நிலையில் இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. 7ம் கட்ட தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து, தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், இதற்கான அறிவிப்பு சில நாட்களில் வெளியாகலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அப்படி அறிவிக்கப்பட்டால் ஜூன் 1ம் தேதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மே மாதம் 7ம் தேதி தொடங்கி, 14ம் தேதி நிறைவைடைய வேண்டும்.