விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்ய பாமக ஆலோசனை கூட்டம் இன்று தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது. இதி்ல் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டத்தி்ல் ஆலோசிக்கப்பட்டது. கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசி முடிவை அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார். பெரும்பாலும் பாமக போட்டியிட விரும்புவதாகவே கூறப்படுகிறது. இது குறித்து பாஜக உள்ளிட்ட கட்சிகளிடம் ஆலோசித்து விட்டு வேட்பாளரை அறிவிப்பார்கள் என தெரிகிறது.