கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அபகரித்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட பிரகாஷ் என்பவர் கரூர் வாங்கல் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட 147,294(b),323,324,365,
506 (ii) ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என பயந்து போன விஜயபாஸ்கர் கடந்த 15 தினங்களாக தலைமறைவாக உள்ளார். இதற்கிடையே அவர் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அந்த நிலையில் மீண்டும் இன்று, கரூர் நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமீன் கேட்டு விஜயபாஸ்கர் சார்பில் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி சண்முகசுந்தரம், நாளை மாலைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.