மயிலாடுதுறை சின்ன கடை வீதியில் ஆர்எஸ்எஸ் சங்க கொடிக்கு மலர் தூவி ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து காக்கி பேண்ட் வெள்ளை சட்டை கருப்பு குல்லா அணிந்து ராணுவ வீரர்கள் போல் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பேரணியாக சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்று துவங்கிய. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துவங்கிய இடத்திலேயே நிறைவடைந்தது. தொடர்ந்து ஆர் எஸ் எஸ் கொடியேற்றப்பட்டுபொதுக்கூட்டம்நடைபெற்றது இதற்கு தனியார் பள்ளி தாளாளர் வெங்கட்ரமணன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மாநில விவசாய அணி பிரிவு கோவி சேதுராமன், போடி கண்ணன் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சிதம்பரம் மௌன மடாலயம் ஸ்ரீலஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். பாஜக இந்து முன்னணி விஸ்வ இந்து பரிசத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்