நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா. இவர் தனது தந்தையைப் போல சினிமாவுக்குள் வராமல் மருத்துவராக உள்ளார். ஐம்பது வயதாகக் கூடிய அனிதா இன்னும் இளமை மாறாமல் இருப்பதாக அடிக்கடி செய்திகளில் வைரலாவதுண்டு. இவர் தன்னுடன் படித்த கோகுல் என்பவரைத் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு கோகுல், தியா என இரண்டு பிள்ளைகள். இதில் தியா அம்மாவைப் போலவே
மருத்துவராக வேண்டி வெளிநாட்டில் மருத்துவம் படித்து வருகிறார். இவருக்குதான் இப்போது திருமணம் நடக்க உள்ளது. திலன் என்பவரைத் தான் திருமணம் செய்யப் போகிறார் தியா.

கடந்த வருடத்தில் இந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. இதற்காக நடிகர் விஜயகுமார் மகள்கள் அனிதா, கவிதா, மருமகள் ஆர்த்தி, பேரன் கோகுலுடன் கோலிவுட் பிரபலங்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார். முன்னதாகம் , சூர்யா குடும்பத்திற்கு அழைப்பு விடுத்தவர் அடுத்ததாக ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து நேரில் அழைத்திருக்கிறார்.

தனுஷுடன் கவிதா, அனிதா…
இதனையடுத்து நடிகர் தனுஷூக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். கோலிவுட் பிரபலங்கல் பலரும் இந்தத் திருமணத்திற்கு வருவார்கள் என்பதால் ரசிகர்கள் இந்த திருமணத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.