கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல், சொந்த ஊரான தேனி அல்லி நகரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இல்லத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு போலீஸ் அதிகாரிகள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உடல் அங்குள்ள மின்மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. வாகனத்தில் இருந்து மயானத்துக்குள் விஜயகுமார் உடலை, டிஜிபி சங்கர் ஜுவால் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தோளில் சுமந்து சென்றனர். பின்னர் டி.ஐ.ஜி. விஜய குமாரின் சடலம், 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதில் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு மற்றம் ஏ.டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி.க்கள் பங்கேற்றனர்.