இதனையொட்டி தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மரியாதை செலுத்தினார். மேலும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் சிலை திறக்கப்பட்டுள்ளது. தேமுதிக சார்பில் வறுமை ஒழிப்பு தினமாக விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். முன்னதாக விஜயகாந்தின் உருவச் சிலையை கட்டி அணைத்து பிரேமலதா விஜயகாந்த் அழுதார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “இன்று முதல் தேமுதிக தலைமை அலுவலகத்தின் பெயர் கேப்டன் ஆலயம் என அழைக்கப்படும். புதிதாக யூ டியூப் சேனல் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது” என்றார்.