சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் , ரசிகர்கள் என அனைவரும் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது X-தளத்தில் விஜயகாந்த் குறித்து நினைவுகூர்ந்தார்… முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது…. மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கியவர் விஜயகாந்த். மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர். தேமுதிக நிறுவனர் விஜயகாந்தை நினைவுகூர்ந்தார் . இவ்வாறு தெரிவித்துள்ளார்.