தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ளஅவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக, விஜயகாந்தின் உடல் தற்போது தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் , ஈழப் பிரச்னைக்காக தானே பெரும்படை திரட்டி போராடினார்; அவர் நம்மிடம் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது; எப்படி ஆறுதல் சொல்லி தேற்றினாலும் மனம் கேட்கவில்லை; மழையோ புயலோ வெயிலோ பனியோ எதையும் கடந்து போவார்; அவர் பட்டினி கிடந்தார், பல்லாயிரம் பேரின் பசி ஆற்றினார். பல இரவுகள் தூங்காமல் படங்களை முடித்துக் கொடுத்த பெரும் உழைப்பாளி; அழகுத் தமிழால் ஆவேசத் தமிழை அள்ளி வீசிய அந்த வாய் மௌனித்து கிடப்பதை பார்க்கும்போது மனது துயருற்று நொறுங்குகிறது என்றார்.