Skip to content

விஜயகாந்த் நினைவுதினம்…. கோயம்பேட்டில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள்-பொதுமக்கள் அஞ்சலி….

  • by Authour

தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அக்கட்சி சார்பில் இன்று அமைதிப்பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து நினைவிடம் வரை பேரணியாக செல்ல தேமுதிக திட்டமிட்டது. இந்த பேரணிக்கு காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது .

எனினும் அமைதி பேரணிக்கு அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி தேமுதிகவின் பேரணியை தொடங்கியுள்ளனர். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் எல் கே சுதீஷ், விஜயபிரபாகரன், தொண்டர்கள் கருப்பு உடை அணிந்து பேரணி செல்கிறார்கள்.

நடிகரும் தேமுதிக தலைவருமாக இருந்த மறைந்த விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக கடைபிடிக்க தேமுதிக முடிவு செய்தது. இதில் பங்கேற்க முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி , தவெக தலைவர் விஜய் என அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தேமுதிக சார்பாக நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதேபோல விஜயகாந்த நினைவு தினமான இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த தலைமையில் மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் தேமுதிகவின் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அமைதிப்பேரணி நடத்த அனுமதி கோரி போலீசாருடன் தேமுதிகவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மணி நேரத்தில் அனுமதி வழங்க கோரி தேமுதிகவினர் போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பது உள்ளிட்டவற்றால் தேமுதிகவினரின் அமைதிப்பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.

இந்த நிலையில் காவல்துறையின் தடையை மீறி தேமுதிகவினர் அமைதிப்பேரணியை தொடங்கியுள்ளனர். சுமார் ஆயிரக்கணக்கானோர் கோயம்பேடு சாலையில் பேரணியாக சென்று வருகிறார்கள். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் எல் கே சுதீஷ், விஜயபிரபாகரன், தொண்டர்கள் கருப்பு உடை அணிந்து பேரணி செல்கிறார்கள். முன்னதாக விஜயகாந்தின் நினைவுதினத்தையொட்டி, அமைதி பேரணிக்கு அனுமதி மறுப்பது என்பது, அரசியல் காழ்ப்புணர்ச்சியா என்றும், இல்லை போலீசாரின் காழ்ப்புணர்ச்சியா என்று தெரியவில்லை என தேமுதிகவின் துணை செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்தார். மேலும் அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி நடத்த அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்தார். எனினும் போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் தேமுதிக தொண்டர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேரணிக்கு அனுமதி அளிக்குமாறு கோயம்பேடு சாலையில் அமர்ந்து தேமுதிக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தான் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் அமைதி பேரணியை தொடங்கியுள்ளனர். விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணியாக செல்கின்றனர்.

விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக கடந்த 5 ஆம் தேதி அன்றே காவல்துறையினரிடம் அமைதிப் பேரணிக்கு அனுமதி கேட்டதாகவும், ஆனால் இன்றைக்கு போலீசார் அனுமதி தர மறுத்து இருப்பதாக தேமுதிகவினர் கூறினர். விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பாட்டாளி மக்கள் மீது அதிக பாசம் கொண்டவர் விஜயகாந்த் என்றும், புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளரவிட்டவர் என்றும் சீமான் பேசினார். கேப்டன் விஜயகாந்தை இழந்து தவிக்கிறோம் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். மண்ணை விட்டு பிரிந்தாலும் விஜயகாந்த் நமது நெஞ்சங்களில் வாழ்கிறார் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!