தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவில் இறுதி நிகழ்வின் போது கலந்து கொள்ள முடியாத பல பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், சூரி எனப் பலரும் நேரில் வந்தனர். இந்த நிலையில், நடிகர் விஜயகாந்துடன் ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘மனக்கணக்கு’ உள்ளிட்டப் பல படங்களில் இணைந்து நடித்த நடிகை ராதா அவரது நினைவிடத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பின்பு, பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது, “விஜயகாந்த் மிகவும் தன்மையான நபர். அவருடைய பிறந்தநாளின் போது தொலைபேசியில் பேசுவேன். சமீபத்தில், என்னுடைய மகள் திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்கப் போயிருந்தேன்.