நுரையீரல் அழற்சி காரணமாக மூச்சு விடுவதில் சிரமப்பட்ட கேப்டன் விஜயகாந்த், நேற்று முன்தினம் சென்னை மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இன்று காலை அவர் உயிர் பிரிந்தது. விஜயகாந்த்துக்கு வயது 71. அவர் உடல் இன்று காலை 8.50 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது குடும்ப வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. பின்னர் தொண்டர்கள் அஞ்சலிக்காக உடல் கோம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. நாளை அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.