கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மீதான விவாதங்கள் நேற்று நடைபெற்றது. நீதிமன்றத்தில் நடந்த இந்த விவாதங்களை செல்போனில் வீடியோ காலில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உறவினருக்கு தமிழினியன் (29) என்பவர் அனுப்பி வைத்துள்ளார்.
நீதிமன்ற எழுத்தாளர் வீரக்குமார் அளித்த புகாரின் பேரில் தமிழினையனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர் மீது மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டங்களான பொதுப் பணி செய்வதில் அரசு ஊழியரை தடுப்பது, பொது ஊழியர் முறையாக அறிவிப்பு இன்றி உத்தரவை மீறுதல், நீதித்துறை நடவடிக்கைகளில் அமர்ந்திருக்கும் பொது ஊழியரை வேண்டுமென்றே அவமதித்தல் அல்லது குறுக்கீடு செய்தல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று காலை குற்றவியல் நீதிமன்ற எண் 1 நீதிபதி பரத்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி கரூர் கிளை சிறையில் அடைத்தனர்.